தமுமுக

/அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ். எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! சகோதரர்களே இந்த வெப் தளம் புதுமடம் தமுமுக.செய்திகளை தாங்கிவரவும் புதுமடத்தில் தமுமுக அழிந்துவிட்டது என சொல்லிக்கொண்டிருக்கும் சிலரும் தமுமுக அரசியல் கட்சியாகிவிட்டது என சிலரும்.சொல்லிவருகிறார்கள்.அரசியல் இல்லாமல் அரசியலில் ஈடுபடாமல் நம்முடய கோரிக்கைகள் நிறைவேராது.அதைபுரிந்தால் ,,,புரியும் தன்மை இருப்பவர்களுக்கு புரியும்.அப்படிப்பட்ட விஷயங்களை முன்னிலைப்படுத்தியே இந்த தளம் வெளி வரும் இன்ஷாஅல்லாஹ்,,,,,,...1/9/2010

சனி, 16 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முறையீடு

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முறையீடு-தமுமுக தலைவர் பிபிசி-க்கு அளித்தபேட்டி;

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இரண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பிரித்தளித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையின் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.


சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து லக்னோவில் கூடி விவாதித்த முஸ்லீம் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு ஓர் சொத்துரிமை வழக்காகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர மத மற்றும் இதர நம்பிக்கைகள் அடிப்படையில் அதை அணுகி தீர்ப்பளிப்பது பாரதூர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ள பிரபல வழக்கறிஞர்களை வைத்து முக்கிய நகரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் மனுதாரரான உத்தரப் பிரதேச வக்ப் வாரியம் மேல் முறையீடு செய்யும் போது, இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=853:babri-masjid-supreme-court-judgement-tmmk-presdent-bbc-interview&catid=54:print-media&Itemid=172
bbc.jpgbbc.jpg
379K   View   Download  

செவ்வாய், 12 அக்டோபர், 2010

சனி, 18 செப்டம்பர், 2010

பித்ரா(2010)கொடுப்பவர்:மன்சூர்.தமுமுக.சவுதி நிர்வாகி.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பித்ரா.2010

சகோதரர்களே இந்த வருடம் பித்ரா. கொடுக்க புதுமடத்தில் .வசூல் செய்யப்படுகிறது.......உங்கள் பித்ரா.பணத் தை கொடுக்கும்படி புதுமடம் தமுமுக.சார்பாக கேட்டுக்கொள்கிறோம்...